சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின உதவித்தொகை:

அதன்படி 2021-22 ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் முதல், ஆராய்ச்சி படிப்பு, ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுபான்மையின உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் வரை கால அவகாசம் ஏற்கனவே அளிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளார் புதுப்பிக்கவும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் ஏற்ற வகையில் வரும் டிச.15 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் www.scholarships.gov.in  என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!