10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.24-ல் நாடு முழுவதும் தேசிய திறனாய்வுத் தேர்வு!!

 என்று என்சிஇஆர்டி தெரிவிப்பு:

இந்தியாவில் 2-வது கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு, அக்டோபர் 24-ம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடைபெறும் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

குறிப்பாகத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு 11, 12-ம் வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 தொகையும், உயர்கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு ரூ.2,000 தொகையும் வழங்கப்படும்.

தேசிய திறனாய்வுத் தேர்வு:

இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டை அக்டோபர் 8 முதல் மாணவர்கள் இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் முதல்கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் யுஜிசி விதிமுறைகளின்படி பி.எச்டி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!