நாடு முழுவதும் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் – வங்கி ஊழியர்கள் சங்கம்!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம்:

மத்திய அரசின் வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, வங்கி சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையருடன் நேரடியாக இன்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் இரண்டு தரப்பினருக்கும் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

இதனால் திட்டமிட்டபடி வரும் 16,17 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாகும் முடிவை மத்திய அரசு கைவிடாத பட்சத்தில் இது போல் பல வகைகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடு முழுவதும் அன்றைய தினம் வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்களின் வங்கி பணிகளை மேற்கொள்ளவதில் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!