நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை – நவ.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வகையில் செயல்படும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9ம் வகுப்பு சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நவோதயா வித்யாலயா:

இந்தியாவில் நவோதயா பள்ளி திறன் வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கும் வண்ணம் இந்திய அரசினால் வடிவமைக்கப்பட்டவையாகும். அந்த வகையில் தற்போது 2022 – 23ம் கல்வி ஆண்டுக்கான 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்துள்ள நிலையில் தற்போது காரைக்கால் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் விண்ணப்பிப்பதற்கான தேதி வரும் நவ.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நவோதயா வித்யாலயா சமிதியின் வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!