பள்ளி மாணவர்களுக்காக வெளியிட்ட புதிய அறிவிப்பு! பெற்றோர்கள் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மேலும், ஆசிரியர்கள் நடத்தும் பாடம் மாணவர்களுக்கு புரிவதை உறுதி செய்ய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிரடி:

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் கல்வி விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் பள்ளிக்கல்விதுறையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடம் பள்ளிக்கல்வித்துறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

இவ்வாறு தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறி வந்துள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு புரியும் படி உள்ளதா என்று உறுதி செய்திட வேண்டும்.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 50 முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள வகுப்புகளில் சென்று பாடம் நடத்துகிறார்களா என்று சோதிக்க வேண்டும். மாதம் தோறும் அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.