இந்தியாவில் பெரும்பாலான ரயில் திட்டங்கள் மெதுவாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், ரயில்வேவுடன் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்க இருப்பதாக தமிழக அரசு அறிவிதுள்ளது. இந்த திட்டத்திற்கு தெற்கு ரயில்வே வரவேற்பு அளித்துள்ளது.
கேளரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் ரயில்வே நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து அதற்கான ரயில்வே பணிகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நிறுவனத்தை உருவாக்கும் என பட்ஜெல்டில் அறிவித்தது. இதற்கு சிலர் அதிகளவில் செலவு செய்து, ஒரு சிறப்பு நிறுவனத்தை உருவாக்க வேண்டுமென்ற திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே உள்ள பல நிறுவனங்களில் ஒன்றை தேர்வு செய்து, இந்த பணியை செய்யலாம் மற்றும் கூடுதல் ரயில்களை அறிமுகப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.