தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய போட்டி பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு!

மாணவ மாணவிகளுக்கு கவிதை போட்டிகளில் இளம் கவிஞர் விருது :

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் ஆண்டு முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான கவிதை போட்டிகள் நடத்தி “இளம் கவிஞர் விருது” மற்றும் பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

முண்டாசு கவிஞ்ன் பாரதி, எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பல அருமை பெருமைகளுக்கு சொந்தக்காரர் தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி. இவர் இந்திய நாட்டின் விடுதலைக்காக கவிதைகள் மூலம் பாடுபட்டார். இவர் தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தனது கவிதைகள் மூலமாக மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டியவர்.

இந்நிலையில் இவருடைய பெருமையை போற்றும் விதத்தில் 101வது நினைவு தினத்தில் 2022-23 ஆம் ஆண்டு முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான கவிதை போட்டிகள் நடத்தி “இளம் கவிஞர் விருது” மற்றும் பரிசுகள் வழங்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன் படி பள்ளி கல்வி ஆணையருக்கு இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி மாணவ மாணவியருக்கு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒன்றிய அளவில் கவிதை போட்டிகள் நடத்தி அதில் 3 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியருக்கு வருவாய் மாவட்ட அளவில் 5.9.22 அன்று கவிதை போட்டி நடத்தி அதில் சிறந்த ஒரு மாணவி அல்லது மாணவரை தேர்வு செய்து அந்த மாணவரின் பெயர் பெற்றோர் பெயர், பயிலும் பள்ளி, மாவட்டத்தின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை 5.9.22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.