புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி பதவியேற்பு!! தெளிவான தகவல் உள்ளே!

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளனர். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நேற்று தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

சட்டசபையின் முதல் கூட்டம் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.

முதலாவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இரண்டாவதாக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவையின் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பை தொடர்ந்து, சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி ஆகியோர் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.