தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!! அவை என்னென்ன?

தமிழகத்தில் நாளை (மே 6) காலை 4 மணி முதல் மே 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதனை பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 புதிய கொரோனா கட்டுப்பாடுகள் என்ன?
 • ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்‌, 25 நபர்களுக்கு மிகாமல்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்‌, தற்போது இறுதி ஊர்வலங்கள்‌ மற்றும்‌ அதைச்‌ சார்ந்த சடங்குகளில்‌ 20 நபர்களுக்கு மேல்‌ அனுமதி இல்லை.
 • மேலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு 20 பேர் மட்டுமே அனுமதி.
50 விழுக்காடு மட்டும்  அனுமதிக்க கூடியவை: 
 • அரசு அலுவலகங்கள்
 • தனியார்‌ அலுவலகங்கள்
 • இரயில்‌ நிலையம்
 • தனியார்‌ பேருந்துகள்‌
 • அரசு பேருந்துகள்‌
 • வாடகை டாக்ஸி
அனுமதி கிடைக்காத கடைகள்
 • உள்‌ அரங்கங்கள்‌
 • திறந்த வெளி கடைகள்
 • அரசியல்‌
 • விளையாட்டு மைதானம்
 • கலாச்சார நிகழ்வுகள்‌
 • இதர விழாக்கள்
 • திரையரங்குகள்‌
அனுமதி உள்ள கடைகள்:
 • பால் வினியோகம்
 • தினசரி பத்திரிகை வினியோகம்
 • மருத்துவமனைகள்
 • மருத்துவ பரிசோதனைக் கூடங்கள்
 • மருந்தகங்கள்
நண்பகல்‌ 12.00 மணி வரை உள்ள கடைகள்:
 • தனியார் மளிகை
 • பலசரக்குகள்‌
 • காய்கறிகள்‌
 • தேநீர்‌ கடைகள்‌
 • குளிர்சாதன கடைகள்

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!