தமிழகத்தில் புதிய ரேஷன் கடைகளுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!

ரேஷன் கடை:

தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த அறிவிப்பை அடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரிப்பும் நோக்கில் “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் தரையில் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் சிந்தி இருக்க கூடாது. அத்துடன் அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரேஷன் பொருட்களை திருடி விற்கும் ஊழியர்களை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!