தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு அதிகம் உள்ளதால் மே 8 வரை இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!! அரசு தகவல்!!

மாநில அரசு உத்தரவு!!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் இரவுநேர ஊரடங்கை மே 8ஆம் தேதி வரை மேலும் நீட்டிப்பதாத மாநில அரசு அறிவித்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்கள்:

தெலுங்கானா மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கு  மேற்பட்டவர்கள் பாதிப்பு எனவும் இப்போது 3 லட்சத்துக்கும் மேல் புதிய  பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அம்மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 7646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,606 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊடங்கு எனவும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும்  அதனை தொடர்ந்து மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் தவிர பிறவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர மக்கள்  அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!