நவ.1., இல் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை!! அமைச்சர் அறிவிப்பு!!

பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுமையாக நவம்பர் முதல் இயங்க போகின்றன

கொரோனா  பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது.  தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தொடக்க பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது,

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!