அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது….!!

அரியர் தேர்வு:

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப் படவில்லை என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு, இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இறுதி பருவத் தேர்வுகளையும், இடைப்பட்ட பருவத் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!