ரயில் பயணிகளின் கவனத்திற்கு IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்:

இந்திய ரயில்வே வாரியமானது ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட தூர பயணங்களுக்கு வசதியாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் ரயில் பயணங்களை தான் தேர்வு செய்கின்றனர். ரயில்களில் தங்கள் இருக்கை மற்றும் படுக்கைகளை முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி உள்ளது. இவற்றை ஆன்லைனிலும் கூட பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ரயில்களில் உடன் பயணிக்கும் பயணிகள் சிலருக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக புகார்கள் பெறப்பட்டது.

இதனால், தற்போது ஐஆர்சிடிசி நாட்டில் உள்ள அனைத்து ரயில் பயணிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக பேசவோ அல்லது பாட்டு கேட்கவோ கூடாது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண் பயணிகள் தனியாக பயணிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் இரவு விளக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் படி நடந்து கொள்ள கூடாது. ரயில்வே ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும் இரவு நேரங்களில் அமைதியாக பணியாற்ற வேண்டும் என்றும் இந்த முடிவுகளை ரயில்வே துறை மிகவும் ஆராந்து எடுத்துள்ளதாகவும், இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!