புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் 15 நாட்களில் கிடைக்கும் என தெரிவிப்பு!!

ரேஷன் கார்டு:

சிவகங்கை குடிமை பொருட்களின் செயல்பாடு குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது, இங்கு 4.14 லட்சம் ரேஷன் கார்டு உள்ளன. 827 ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு 6311 டன் அரிசி, 559 டன் சர்க்கரை, 630 டன் கோதுமை, 257 டன் துவரம் பருப்பு, 3.30 லட்சம் பாக்கெட் பாமாயில், 144 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரேஷன் கார்டுகள் ஆன்லைனில் விண்ணப்பித்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின் தகுதியிருப்பின் 15 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும் கடந்த 4 மாதத்தில் 8,537 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் அட்டை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!