ரேஷன் கடை பொருட்கள்:
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் ‘பயோமெட்ரிக் மிஷினில்’ விரல் பதிவு செய்து பொருட்கள் பெறும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதியோர், வயதான பெண்கள் ஆகியோருக்கு பயோமெட்ரிக்கில் விரல் பதிவு பதிவாகாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் வயதானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. அதேபோல் வயதானவர்கள் பொருட்கள் பெறுவதில் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அக்.7ல் சிவில் சப்ளை கமிஷனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் முதியோர் கைரேகை பதிவாகாவிட்டாலும், பதிவேடுகளில் பதிவுகளை செய்து விட்டு பொருட்கள் வழங்கலாம் என கூறியுள்ளார். எனவே முதியவர்கள் கைரேகை பதிவாகாவிட்டாலும் பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் அவர் கொண்டு வரும் ரேஷன் கார்டில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக சிவில் சப்ளை துறையினர் கூறியுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!