தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான DA பற்றி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து கடந்த 24ம் தேதி ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துறை:

தற்போது தமிழக அரசு மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பை தற்போது நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் ஏழை பெண்கள் மிகவும் பயன் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக பிங்க் பேருந்து வசதி தமிழகத்திலேயே சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைலான ஆட்சியில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கடந்த 24ம் தேதியன்று ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து கொள்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015ம் ஆண்டிலிருந்து தரவில்லை என்றும் பஞ்சப்படி என்னும் DA வை விரைவில் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!