ரயில் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு! அமைச்சகம் விளக்கம்!

ரயில் பயணத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பயனத்தை மேற்கொள்கின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்கள் தான். பேருந்துகளை விட மிகவும் கம்மியான விலை டிக்கெட்கள் மற்றும் பல வகையான வசதிகளை கொண்டுள்ளதால் ரயில் பயணத்தை விரும்பும் பொதுமக்கள் தான் பலர் உள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால் சில சிக்கல்களும் ரயில் பயணத்தில் உள்ளது.

இரவு பயணங்களின் போது மற்ற பயணிகளுக்கு இடையூறை சிலர் ஏற்படுத்துவதாக ரயில்வே அமைச்சகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இவற்றை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் ரயில்வே அமைச்சகமும் செயல்பட்டது. அதன்படி, தற்போது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு என்று சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசவோ அல்லது பாட்டு கேட்கவோ கூடாது. இரவு நேரங்களில் இரவு விளக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் படி நடந்து கொள்ள கூடாது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண் பயணிகள் தனியாக பயணிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். ரயில்வே ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும் இரவு வேளைகளில் அமைதியாக பணியாற்ற வேண்டும் என்றும், இதனை மீறும் நபர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!