ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை ..!!

பொது விடுமுறை:

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

நவம்பர் 6ம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உணவுப் பொருள் வழக்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் ஆனந்தகுமார், அனைத்து மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1, 2, 3ம் தேதிகளில் கூடுதல் பணிநேரம் செயல்படுவதால் 6ம் தேதி பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் 7ம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!