அனைத்து பொது போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட்! வெளியான தகவல்

அனைத்து பொது போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட்! 

மொபைல் செயலி மூலம் இ-டிக்கெட் எடுத்து மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர போக்குவரத்து குழும அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.

இ- டிக்கெட் முறை:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய இ- டிக்கெட் எடுக்கும் புதிய திட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்த பின்பு முதற்கட்டமாக டிசம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து ஒரே இ-டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம் எனவும், இதை அடுத்து பெருநகர போக்குவரத்து குழும அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மாதங்களில் தெற்கு ரயில்வே உடன் இணைந்து மெட்ரோ, பேருந்து, மின்சார ரயிலுக்கும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் சிடிஎஸ்சி என்ற center for development of advanced computing நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிநவீன அப்பிளிக்கேஷன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய 3 பொது போக்குவரத்தையும் இணைத்து எவ்வளவு நேரம் ஆகும் எனவும், அதற்கான கட்டணம் எவ்வளவு என்ற தகவல்கள் வரும், மேலும் அந்த வாகனங்களில் ஏறும் முன் பயணிகள் கொடுக்கப்பட்ட கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு அதன் பயன்பாடுகளை பொறுத்து ஷேர் ஆட்டோ, ஓலா உள்ளிட்ட வாடகை வாகனங்களில் இந்த வசதி இருந்த இடத்தில் இருந்தே அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top