ஆன்லைன், நேரடி வகுப்புகள் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை……

மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல தரப்பினர் கேள்வி எழுப்பி வந்ததால் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா 3ம் அலை பரவும் என பெற்றோர்கள் பயப்படுவதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தற்போது கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உடல்நலம் சரியில்லாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!