தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி!!

கொரோனா 3ம் அலை பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வேலூரில் தடுப்பூசி செலுத்தாத பயணிகள் பேருந்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி:

பேருந்திலோ பயணிப்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என கூறப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் தலைமையில் வேலுார் பஸ் ஸ்டாண்டில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 120 பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 120 பயணிகள் பஸ்ஸில் இருந்து இன்று இறக்கி விடப்பட்டனர். இதில், பாதி பேர் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டு கொண்டனர் என கூறியுள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!