பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள்:
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் என, 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக, 90 ஆயிரம் மாணவர்கள் வரை படித்து வந்தனர்.
அனைத்து பள்ளிகளிலும் கை கழுவும் வசதி, சோப்பு, தண்ணீர் கட்டாயம் வைத்திருக்க, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
உணவு சாப்பிடும் இடங்களில், கூட்டமாக அமர்வதை தவிர்த்து, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்திருப்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறித்து பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!