6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

முக ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்தகட்ட தளர்வுகள் அல்லது அடுத்த கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர்  முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

ஏற்கனவே சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

தளர்வுகள் குறித்து இன்று மாலை வெளிவரும் தகவல்கள்:

இதனால் பள்ளிகள் திறப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் / தளர்வுகள் குறித்து இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.