நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம்!!

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை திறக்கப்படவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை  சார்பில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1.11.2021 அன்று பள்ளிகள் திறக்கப்படும்போது, எனது மகன் அல்லது மகள் பள்ளிக்கு அனுப்ப நான் முழுவிருப்பத்துடன்  ஒப்புதல் அளிக்கிறேன். என் மகள் அல்லது மகன் நன்றாக இருக்கிறார். அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், எனக்கு முழுமையாக தெரியும்.

இது  தவிர   குடும்பத்தில்  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் குறித்து பள்ளி தலைமையாசிரியர் வழங்கிய அனைத்து வழிமுறைகளை  பின்பற்றுவேன், என எழுதப்பட்ட கடிதத்தில் மாணவரின் பெற்றோர்,பாதுகாவலர் கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!