அமைச்சர் அறிவிப்பால் நாளை முதல் பள்ளிகள் திறப்பதில் பெற்றோர்கள் மகிழ்ச்சி!!

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் பல மாதங்களுக்கு பின்னர் நாளை (செப்.1) முதல் திறக்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

பள்ளிகள் காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாதவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பள்ளிக்கும் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், ஒரு வேளை அவர்கள் முகக்கவசம் அணிய மறந்தாலோ, அல்லது முகக்கவசத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கு கொடுப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கூடுதல் முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும்.

  • மாணவர்களுக்கு  தொடக்கத்திலேயே பாடங்களை நடத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் . மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 95% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே மாணவர்கள் அச்சம் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

  • மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்படவில்லை.
  • பெற்றோர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!