மக்களே உஷார்!! வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம்!!

வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்த்த முடிவு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

அதில் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல், வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 இவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் எனவும், மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை முற்றிலும் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!