ரேஷன் கடைகள்:
தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நடைமுறையிலுள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பல சிக்கல்கள் உள்ளதால், பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகயிடம் பொதுமக்கள் புகார்கள்:
ஆனால் இந்த பயோ மெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த பயோமெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என சமீப காலமாக புகார்கள் எழுந்து வருகிறது.
கிராம பகுதிகளில் பொருட்கள் வாங்குவதில் காலதாமதம்:
கைரேகை பதிவு செய்வதற்கு இணையதள வசதி தேவைப்படுவதால் மலை ஓரங்களில் உள்ள கிராம பகுதிகளில் இணையதள வசதி சீராக இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் புகார்கள்:
தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் விரல் ரேகை பதிவாவதில்லை. பயோமெட்ரிக் இயந்திரம் வேலை செய்யாத நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வழங்காமல் திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!