திமுக தேர்தல் அறிக்கையில் தகவல் தெரிவிப்பு:
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் வேட்பாளர்களைத் துளைத்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்காவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் மக்களை சந்திக்கும் போது மக்களின் கேள்விகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என திமுக வேட்பாளர்கள் கூறி வருகின்றன.
தேர்தல் முடிந்த பின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!