ரேஷன் கடைகளில் கைரேகை பதிக்க தயக்கம் காட்டும் மக்கள்!

ரேஷன் கடைகளில் கொரோனா விதிமுறைகள்: 

தமிழகத்தில் வழக்கமாக ரேஷன் கடைகளில் மக்கள் கைரேகை வைத்தே பொருட்களை பெற்று செல்வது வழக்கம். தற்போது உள்ள கொரோனா சூழலில் இந்த கைரேகை வைத்து பொருட்களை பெறமுடியாததால் ரேஷன் கடைகளுக்கு வருபவர்கள் கூட முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பானையும் பயன்படுத்துவது இல்லை. ரேஷன் கடைகளிலும் 2000 பேர் வரை பொருட்களை பெற்று செல்கின்றனர்.

முன்னதாக இந்த ரேஷன் அட்டைகள் பேப்பர்கள் வாயிலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் உள்ளதால் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதற்கான உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை கை ரேகை பதிவை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது மாற்று வழியாக கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!