மதுரையில் புதிய வசதிகளுடன் பெரியார் நிலையம் – காணொளி மூலம் முதல்வர் திறப்பு!

மதுரை மாநகரத்தில் சுமார் 175 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பெரியார் பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.8) திறந்து வைக்க இருக்கிறார்.

பேருந்து நிலையம்

இந்த பெரியார் பேருந்து நிலையம் தற்போது 57 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இட வசதியுடனும், 450 கடைகள் செயல்படுவதற்கான வணிக வளாகத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.

தவிர பேருந்து நிலையத்தின் தரை தளத்தில் 2 அடுக்குகளில் 5000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதிகளுடன் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலும் பேருந்து நிலையத்தின் சுவர்கள் முழுவதும் மதுரையின் பெருமையை பறைசாற்றும் விதத்திலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்படி நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.8) திறந்து வைக்க இருக்கிறார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!