அமைச்சர் சந்திரா பிரியங்கா தெரிவிப்பு:
தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தி உள்ளது போல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய பிங்க் நிற பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் சந்திரா பிரியங்கா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என்ற அறிவிப்பையும் அமைச்சர் சந்திரா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் நவீன வசதிகளுடன் இந்த பிங் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முதல் கட்டமாக பெண்களுக்காக 200 இலவச பிங்க் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் தமிழகத்திலும் பெண்களுக்கு என இலவசமாக பிங்க் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!