இனி மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம்!

தற்போது, தமிழகத்தில் உள்ள அணைத்து மருத்துவ மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட முக ஸ்டாலின் அவர்கள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறையில் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார் .

கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோயாளிகளுக்கான அளிக்கப்படும் உணவு, சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன் படி, அனைத்து மருத்துவமனைகளில்  பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு பின்னர் உரையாடுகையில் , ஊரடங்கு காலத்திலும் தனியார் அமைப்பு சார்பில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.