விரைவில் ரேஷன் கடைகளில் பயிறு வகைகள் வழங்கும் திட்டம்?

தமிழக அரசு சார்பில் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பனை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் பயிறு வகைகள்:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவான விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அன்றாட உணவு தேவையை எளிதாக பூர்த்தி செய்கின்றனர்.

இல்லத்தரசிகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி மற்றும் பயறு வகைகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சலுகையாக அமைந்துள்ளது.

வேளாண்மை பட்ஜெட் தாக்கல்:

மேலும் பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளுக்காக ரூபாய் 45.97 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறையின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வேளாண்மை பட்ஜெட் தாக்கல் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!