பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!!

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில்  அக்டோபர் 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தது.

தேர்வு நடைபெறும் தேதிகள்:

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான கணினி வழித் தேர்வு வரும் 28.10.2021, 29.10.2021, 30.10.2021, 31.10.2021 ஆகிய தேதிகளில் (காலை/ மதியம்) நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு அதில் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.

தேர்விற்கு எடுத்து வர வேண்டியவை:

காலை தேர்வாக இருந்தால் 7.30 மணிக்கு உள்ளாகவும், மதியம் தேர்வாக இருந்தால் 12.30 மணிக்கு உள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியை தவறாமல் கொண்டு வர வேண்டும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!