ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு!! விரைவில் அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் பரிசுப்பணம் சேர்த்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் தொகுப்புடன் ரொக்கம்:

பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசாக ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கபட்டு வரும் பொங்கல் தொகுப்பை வழங்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் சில மளிகை பொருட்களும் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதுவரை பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுப்பணம் பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில் பல்வேறு தரப்பினர் பொங்கல் பரிசுப்பணம் வழங்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். அதாவது இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் 2,500 ரொக்கப்பணமும் அடங்கி இருந்ததை சுட்டிக்காட்டி அறிவுறுத்தி வந்தனர். அதனால் தற்போது தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசுப்பணம் வழங்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் அதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!