ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜன.3 முதல் பொங்கல் பரிசு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் இலவசமாக 21 மளிகை பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தை ஜனவரி 3ம் தேதி முதல் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

குடும்ப அட்டைக்கும் ரூ.505 மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்குவதற்கு ரூ.159 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முன்னதாக ஆணை வெளியிட்டுள்ளார். இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் ஜனவரி 3ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

அதன் பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் திட்டம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பிருந்து பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கடையிலும், தினசரி 200 பேர் வீதம் கூட்ட நெரிசல் இல்லாமல் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிமுறைகளையும், சமூக விலகலையும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருட்கள் அனைத்தும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!