ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு!! முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு:

ரேஷன் கடை மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில்,சரியான அளவில் பேக்கிங் செய்து துணிப்பைகளில் போட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று நியாய விலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் அறிக்கை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் பொங்கல் பரிசு பொருட்கள் எடை குறைவு ,பாக்கெட் உடைப்பு போன்ற குறைகள் இருப்பதால் மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கு இடையில் பிரச்சனை எழுகிறது. இந்த மாதிரியான தகராறுகளை குறைப்பதற்காக அரசு வழங்கும் 21 வகையான பொங்கல் பரிசு பொருட்கள் எந்த குறைபாடும் இல்லாமல் ரேஷன் கடைகளுக்கு விநியோக்கிப்பட்டால் எந்த மனக்கசப்பும் வராது .

மக்களும் மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கி செல்வார்கள். இதனால் விற்பனையாளர்களுக்கு பணிச்சுமையும் இருக்காது மற்றும் தமிழக அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் .எனவே அரசு இந்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!