தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக அறிவித்த நிலையில், இவற்றை கொள்முதல் செய்யும் முறைகளில் கொள்முதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அரசின் மீது புகார்கள் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
மக்களுக்கு கொரோனா நிவாரண பொருள்களும் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. தற்போது அதே நிறுவனத்தில் தான் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், கடந்த ஆட்சியில் கொள்முதல் நடந்த அதே இடத்தில் தற்போதும் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த டெண்டரில் அதிக அளவு பணம் கமிஷனாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு வழங்கும் பொருட்களின் தரம் குறைவாகி விடுகிறது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!