ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு 2022

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் உட்பட 20 மளிகை பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதனுடன் ரொக்கப்பணம் வழங்குவது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதல்வர் ஆலோசனை:

தமிழகத்தில் வழக்கமாக பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு அரசு குடும்ப அட்டைகளுக்கு இலவச வேட்டி, சேலை அதனுடன் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, கிஸ்மிஸ் போன்ற பொருட்களை அரசு மக்களுக்கு வழங்கி வந்தது. கடந்த ஆட்சி காலத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு 200 ரூபாய் வழங்கி வந்த நிலையில், கடந்த பொங்கல் பண்டிகைக்கு தலா ரூ.2,500 ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!