ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை!! அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் பரிசுப்பணம் வழங்கப்படுமா? என்ற பொதுமக்களின் கேள்விக்கு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

விளை நிலங்கள் மற்றும் விவசாயிகளை காக்கும் விதமாக மலை அடிவார பகுதிகளில் தற்காலிக வாட்ச்மேன் நியமிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கூட்டுறவு வங்கிகளில் 5 ஆயிரம் கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது, வரும் 2022 மார்ச் மாதத்திற்குள் 10 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசுப்பணம் வழங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!