அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு – நவ.24ம் தேதிக்கு மாற்றம்!

தமிழகத்தில் அரசு பழங்குடியினர் நல பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வு வரும் நவம்பர் 24ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் கலந்தாய்வு:

முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது நாளை நவ.21ம் தேதி காலை 10 மணிக்கு பழங்குடியினர் நல இயக்ககத்தில் கலந்தாய்வு நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக நாளை நடக்க வேண்டிய கலந்தாய்வு வரும் நவ.24ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே குறிப்பிட்ட அதே நேரம், அதே இடம் என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இயங்கி வரும் பழங்குடியினர் நல பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!