ஜூலை 16 வரை நடத்த திட்டமிட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு!! என அறிவிப்பு!!

மாநில அரசு அறிவிப்பு:

  1. கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைவதால் ஒடிசா மாநிலத்தில் ஜூலை 16 வரை நடத்த திட்டமிட்ட அனைத்து தேர்வுகளையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைகின்றன.
  2. எனினும்  புதிய தகவல் மற்றும் மறு அறிவிப்பு தொடர்பான தகவல்களுக்காக OSSC வலைதளத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும் என தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரையில் நடத்தப்படவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றங்களையும் தேர்வு ஆணையம் அறிவிக்கவில்லை.

தேர்வு ஒத்திவைப்பு:

  • இதேபோல், ஜூலை 6 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கான தேர்வும்,
  • ஜூலை 8 ஆம் தேதி நடைபெற இருந்த தொழில்துறை ஊக்குவிப்பு அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வும்,
  • ஜூலை 14 ஆம் தேதி நடத்த இருந்த உதவி அறிவியல் அலுவலர் பதவிக்கான முக்கிய எழுத்துத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள ossc.gov.in என்ற வலைதளத்தில் பார்க்கவும்.

  • தேர்வுக்கான  அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!