தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு? பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனை!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! 

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால், ஓட்டு எண்ணிக்கை நாளைக்கு மறுதினம் (மே 3) நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அடுத்த உத்தரவு! கல்வித்துறை ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன.

தற்போது மாநிலத்தில் கொரோனா  2 வது அலை வேகமாக பரவி வருகிறது.

நாள் ஒன்றிக்கு 2000 மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

அதனால் கல்விதுறை அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அடுத்த உத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மே 2 இல் வாக்கு எண்ணிக்கை, மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனால் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை அரசு ஏற்கவில்லை. தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a comment