TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்மொடி அறிவிப்பு!!

அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவிப்பு:

தமிழகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வானது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.

விரிவுரையாளர் தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. இதில் 1,058 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறுதேர்வானது வரும் அக். 28 ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் போ் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தேர்வு மையங்களின் பட்டியல் வெளியானது.

இந்நிலையில் அக்டோபர் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே மாணவர்கள் தேர்வு எழுதும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!