3 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவிப்பு:

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வளாகத்தை அரசின் வழிகாட்டுதல்களின் படி தூய்மை செய்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

CEO அறிவுறுத்தல்:

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேசிய அடைவு ஆய்வு தேர்வில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்

மேலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது அவசியம், அவற்றை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!