இன்று முதல் 9-ஆம் தேதி வரை கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு தடை! அரசு அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரை பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள்:

இதனை கருத்தில் கொண்டும், ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரையில் அதிக மக்கள் கூடும்பட்சத்தில், அரசின் விதிகளை பின்பற்றுவதிலும், கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பொதுமக்களுக்கு திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை:

முக்கிய கோவில்களில் 1,2,3,4 போன்ற தேதிகளில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்கியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தடை உத்தரவு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையில் பொதுமக்கள் கூடி வழிபடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவல தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!