நாளை பொது விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம்:

சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினமான ஆகஸ்ட் 3 ஆம் தேதியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

அவை வழக்கம் போல செயல்பட முடியும். குறிப்பாக நாளை அளிக்கப்பட இருக்கும் விடுமுறை பொறுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் 14.08.2021 அன்று வேலை நாளாக ஈடுசெய்யப்படுவதாக அறிவித்து, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகள் குறிப்பிட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையின் போது அரசின் அலுவல்களை கவனிப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலம் போன்றவை மட்டும் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!