தமிழகத்தில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு

தமிழக அரசு:

தமிழகத்தில் முதற்கட்டமாக 26 இடங்களில் தகைசால் பள்ளிகள் தொடங்க இருந்தாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வி தரம் மேம்படுத்தப்படும் என்று அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் , மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு . அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று (5.9.2022) சென்னை , பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி , நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!