புதுச்சேரியில் சில விதிமுறைகளோடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு!!

கல்வித்துறை இயக்குனர் உத்தரவு:

புதுச்சேரியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

திறக்கப்படலுள்ள பள்ளிகள்:

 • புதுச்சேரி
 • காரைக்கால்
 • ஏனாமில் அரசு
 • அரசு நிதியுதவி
 • தனியார்
 • சிபிஎஸ்இ
 • ஐசிஎஸ்இ

பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

 • பள்ளி பேருந்துகளில் வரும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பேருந்துகள் இயங்கும், கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
 • பள்ளி வரும் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளி சார்பில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
 • பள்ளிகளில் கட்டாயமாக அரசின் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
 • அரசின் அடுத்த உத்தரவு இல்லாமல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது. பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!